
தமிழகம்
சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதி!! திக்கு முக்காடிய ஈபிஎஸ் தரப்பு;
இன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் அதிமுக பொது குழுவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்திருந்த பன்னீர்செல்வம் வழக்கை நாளைய தினம் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நாளை மதியம் 2:15 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தற்போது பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா என்று நீதிபதி கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். அதிமுக பொது குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்து இடுவது யார்? என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
எத்தனை நாட்களுக்கு முன்பு பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என அவர் சரமாரியாக கேள்வியை எழுப்பினார். பதவி காலாவதியாகவில்லை எனில் தலைமை கழக நிர்வாகிகள் எப்படி பொதுக்குழுவை அறிவிக்கலாம் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
