கர்மா அடிப்படையில் தனி நீதிபதி கருத்து… ஐகோர்ட் கிளை உத்தரவு!!

காவலர் பணியிட மாற்றத்திற்கு கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் காவல்துறையில் முதற்நிலை காவலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியின் போது உரிய விடுமுறை எடுத்துக்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மீண்டும் அதிர்ச்சி..!!! ஆன்லைன் ரம்மியால் மாணவர் தற்கொலை!!

குறிப்பாக பணியில் கவன குறைவு போன்ற காரணத்தால் காவலர் முருகன் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு காவலர் முருகனை பணிமாற்றி மதுரை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே வழக்கின் விசாரணை அமர்வானது சில மாதங்களுக்கு முன் வந்தது.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்… 8 பேர் சடலமாக மீட்பு!!!

அப்போது கர்மா அடிப்படையில் முருகனின் இடமாற்றத்தை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து காவல்துறையினர் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கர்மா அடிப்படையில் வழங்கிய உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment