இதுக்கெல்லாமா கேஸ் போடுவாங்க? சமந்தாவுக்கு நீதிபதி அறிவுரை!

தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பதிவு செய்துள்ளதாக சமந்தா ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இதற்கெல்லாமா வழக்கு போடுவார்கள்? என சமந்தாவுக்கு நீதிபதி அறிவுரை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார் என்பதும் இது குறித்த செய்தி ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் சமந்தா விவாகரத்து செய்ய என்ன காரணம் என கூறி ஒருசில யூடியூப் சேனல்கள் வதந்திகளி பரப்பியதாகத் தெரிகிறது. இதனால் சமந்தா, சம்பந்தப்பட்ட சில யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்

இந்த அவதூறு வழக்கு இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அது ஒரு கருத்து கூறி அவர்களை மன்னிப்பு கேட்க சம்பந்தம் இருக்கலாம் என்றும் இதற்கெல்லாம் வழக்கு போட தேவையில்லை என்றும் அறிவுரை கூறினார் பிரபலமானவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்வை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டு அதன் பின்னர் வருகிறார்கள் என்றும் அவர் கூறினார் நீதிபதியின் இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment