
செய்திகள்
புத்தர் பிறந்த இடத்துக்கு பயணம்! அங்கு 5 ஒப்பந்தங்கள்..!! மோடியின் பக்கா பிளான்;
உலகமெங்கும் இன்றைய தினம் புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது. இது புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியமான விழாவாக காணப்படுகிறது. இதனால் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டுமன்றி அரசியல் கட்சிப் பிரமுகர்களும் புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி புத்தர் பிறந்த இடத்திற்கு பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புத்தர் பிறந்த இடமான நேபாள நாட்டின் லும்பினி பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் செய்கிறார். மேலும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிகிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி பயணத்தின்போது இந்தியா-நேபாளம் இடையே 5 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது.
அதுமட்டுமில்லாமல் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா அதிகளவு நேபாளத்தில் முதலீடு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு இந்திய எல்லைகளில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது.
