மார்பளவு தண்ணீரில்…. 1000 அடி நீளமுள்ள குகையில்…. வீற்றிருக்கும் அதிசய நரசிம்மர்..! பார்க்கலாமா…

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோவில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோவில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோவில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோவில் குறித்து பாப்போம்… வாங்க.

இயற்கையோடு இணைந்த கோவிலைத் தரிசிப்பது என்றால் தனி விசேஷம் தான். காடுகள், மலைகளைக் கடந்து ஒரு கோவில் இருந்தால் அங்கு செல்ல வேண்டும் என்று பக்தர்கள் பிரயாசைப்படுவார்கள்.

Bidhar Nagar Narasimmar temple way
Bidhar Nagar Narasimmar temple way

அதே போல சாதாரணமாக நகருக்குள் இருக்கும் கோவிலுக்கு அவ்வளவு பெரிய மவுசு இருப்பதில்லை. மலை உச்சியில், குகைக்குள், அடர்ந்த காடுகளுக்குள் என்று இருந்தால் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ஒரு தன்னெழுச்சி பக்தர்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு தலம் தான் நாம் பார்க்கப் போகும் கோவில்.

இது கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகைக் கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.

1000 அடி நீளமுள்ள இந்த மலைக் குகையில் கடுமையான வறட்சியான காலத்திலும் கூட எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது..? எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.

Water in this cave
Water in this cave

இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடந்து சென்று நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். குகையில் எப்பொழுதும் வவ்வால்கள் தொங்கியபடியே இருக்கிறது.

பொதுவாக மனிதர்கள் நடமாடினாலே அங்கு வெளவால்கள் வருவதில்லை. மனிதர்களைக் கண்டு ஓடிவிடும். ஆனால் இந்த வெளவால்கள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதுமில்லை. இதுவரை எந்த மனிதர்களையும் காயப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குகையின் இறுதியில் சுயம்புவாக தோன்றிய ஜர்னி நரசிம்மரும், சிவலிங்கமும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். நரசிம்ம பெருமான், இரண்யகசிபுவை பிரகலநாதனுக்காக வதம் செய்கிறார். அதன் பின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை, இந்த குகையில் வதம் செய்ததாகவும், இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணங்கள் கூறுகிறது.

நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் கடினமான பாதைகளைக் கடந்து சென்றால் ஜர்னி நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

பக்தர்கள் இந்தக் கோவிலைப் பற்றி சொல்லும்போது, யோகமும், ஞானமும், வீரமும், விவேகமும் தந்தருளுகிறார் நரசிம்மர். இவரைத் தரிசிப்பது இந்த பூர்வ ஜென்மத்துக்கான புண்ணியம் என்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.