News
ஒரு போட்டோவால் பிரபலமான பத்திரிகையாளர்!
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு பிசி மேகசின் (PC Magazine) என்ற வெப்சைட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் டானி ஹாஃப்மேன் என்பவர் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் இயற்கை, தொழில்நுட்படம் தொடர்பான புகைப்படங்களை நேரடியாக களத்திற்கு சென்று படம் பிடிப்பது வழக்கம்.
இந்த நிலையில், வடமேற்கு அர்ஜென்டினா பகுதியில் இந்த கிரகணம் துல்லியமாக தெரியும், அதுவும் முழு கிரகணம் ஏற்படும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டது.
இதையடுத்து நியூயார்க்கில் இருந்து பத்திரிகையாளர் டானி, தனது பெட்டி படுக்கையுடன் சூரிய கிரகணத்தை போட்டோ எடுப்பதற்காக ஒரு குழுவுடன் அர்ஜென்டினா கிளம்பி விட்டார்.

நியூயார்க் நகரில் இருந்து 40.7 டிகிரி கோணத்தில் வடக்கையும், தென்அமெரிக்காவில் இருந்து 29.3 டிகிரி தெற்கு கோணத்திலும் டானி இருந்தார். இது உலகின் தலைகீழ் பகுதி போன்றதாகும்.
அப்போது இரவு நேரத்தில் சுற்றும்முற்றும் எந்த ஒரு வெளிச்சமும் இல்லை. அப்படியே மேல்நோக்கிப் பார்த்தால், எண்ணற்ற நட்சத்திரங்கள், காந்த அலைகளுடன் பிரபஞ்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர் அதையும் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து அர்ஜென்டினாவில் உள்ள சன் ஜூவான் என்ற நகரைக் கடந்து சென்று சூரிய கிரகணம் துல்லியமாக தெரியும் இருப்பிடத்துக்கு டானி சென்றடைந்தார். பத்திரிகையாளர் டானி சூரியகிரகணத்தை அடுத்ததடுத்து தொடர்ந்து போட்டோ எடுத்தார். தொலைவில் இருந்தபடியே ஒரு போட்டோ, ஜூம் செய்து ஒரு போட்டோ என வெவ்வேறு கோணங்களில் டானி புகைப்படம் எடுத்தார். !
