ஜோஸ் ஆலுக்காஸில் திருடி மயானத்தில் புதைக்கப்பட்ட நகைகள்! சிக்கிக் கொண்ட திருடன்!! கடை ஊழியர்களுடன் தொடர்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் நகை திருடப்பட்டது. தற்போது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளன. வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ்-ல் சிங்கம் முகமூடியுடன் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டன.

பள்ளிகொண்டா பகுதியில் தனியார் பள்ளியில் லேப்டாப் திருடிய திருடனின் உடலமைப்பு, திருடிய விதம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடியவரோடு ஒத்துப் போனது.

ஒடுக்கத்தூரில் புதிதாக வாடகைக்கு குடி வந்த நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஒடுக்கத்தூர் சென்ற போலீசார் அந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.

குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டிக்காராமன் என்ற அந்த நபர் தான் நகை திருட்டில் ஈடுபட்டவர் என்பதை போலீசார் உறுதி செய்தனர். நகைகளை எங்கே மறைத்து வைத்து குறித்த போலீசாரின் கேள்விக்கு உண்மையான பதில் கூறாமல்  பல இடங்களுக்கும் போலீசாரை அலைக்கழித்தான் என்றும் கூறப்படுகிறது.

டிக்காராமன் அடிக்கடி மயானத்துக்குச் சென்று வந்ததாக உள்ளூர் மக்கள் தகவல் அளித்தனர். மயானத்துக்கு அழைத்து சென்ற போலீசார் 3 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்டனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் துளையிட்ட வெண்டிலட்டர் இருப்பது எப்படி தெரியவந்தது என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடை ஊழியர்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment