
Entertainment
பாடலுக்கு நோ சொல்லுங்க; சினிமாவுக்கு உடனே வாங்க-அழைக்கும் ரசிகர்கள்;
முன்புதான் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக காணப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல நடிகைகள் மட்டுமின்றி துணை நடிகைகள் மற்றும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கும் கதாநாயகிகளை விட அதிக அளவு ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் பிரபல பின்னணி பாடகி ஜோனிட காந்தி. இவர் அனிருத் உடன் பெரும்பாலும் இணைந்து பாடுவார். அதுவும் குறிப்பாக செல்லம்மா பாடல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.
அதன் பின்பு வெளியான அரபி குத்து பாடல், பூஜா ஹெக்டே விட இவர் தான் அழகாக உள்ளார் என்று நெட்டிசன்கள் கூறுமளவிற்கு தனது குறும்புத்தனமான பாணியில் பாடலை பாடினார்.
இதனை அறிந்த ஜோனிட காந்தி அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டு வருகிறார். அதுவும் இவர் மாடல் அழகி போல வரிசையாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவில் காணப்பட்டுள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
