உயரத்திற்கு சென்றார் அகிலேஷ் யாதவ்; கட்சியில் இணைந்தார் இந்தியாவின் உயர்ந்த மனிதர்!
அடுத்த மாதம் உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு ஆட்சியில் உள்ள பாஜக கட்சியில் பெரும் பின்னடைவு நிகழ்ந்ததாக காணப்படுகிறது.
ஏனென்றால் பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து வந்தனர். அதோடு மட்டுமல்லாமல் சமாஜ்வாதி கட்சியிலும் ஒருசில எம்எல்ஏ, அமைச்சர்கள் இணைந்தனர்.
இதனால் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி கை ஓங்கி உள்ளதாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் உயர்ந்த மனிதர் தற்போது சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். அதன்படி இந்தியாவின் உயர்ந்த மனிதராக தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.
இன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் தர்மேந்திர பிரதாப் சிங். 8 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட தர்மேந்திர பிரதாப் சிங் தான் இந்தியாவின் மிக உயர்ந்த மனிதராக கருதப்படுகிறார்.
சமாஜ்வாதி கட்சியின் கொள்கைகள் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான நம்பிக்கையால் அக்கட்சியில் சேர்ந்ததாக தர்மேந்திர பிரதாப் சிங் விளக்கம் அளித்தார்.
