Connect with us

டெல்டா+ தடுப்பூசி: சிறப்பாக செயல்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன்!

News

டெல்டா+ தடுப்பூசி: சிறப்பாக செயல்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன்!

2479b508b88034f5aa6e2c2cb96e4d65

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் புதிதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்திருக்கும் தடுப்பூசி டெல்டா பிளஸ் வைரஸை எதிர்க்கும் தன்மையுடையது என செய்திகள் வெளியாகியுள்ளது 

கொரோனா வைரஸுக்கு எதிராக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி சிறப்பாக செயல்படும் என்றும் இந்த தடுப்பூசி உருமாறிய வைரஸ்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 

மேலும் இந்த தடுப்பூசியை ஒரு டேஸ்ட் போட்டால் போதும் என்றும் அது வைரஸுக்கு எதிராக வீரியத்துடன் செயல்படுவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படும் தன்மையுடையது என சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் சிறப்பாக செயல்படும் என்று ஆய்வில் தகவல்கள் வெளியாகி உள்ளது

இதனை அடுத்து இந்த தடுப்பூசிக்கும் விரைவில் இந்தியாவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி சிறப்பான எதிர்ப்பு சக்தி இருப்பது மட்டுமன்றி குறைந்தது எட்டு மாதங்களுக்கு அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top