ஆஸ்கர் விருது விழாவில் ஆடையணியாமல் வந்தாரா ஜான் சீனா?.. சரியான தில்லாலங்கடி டிராமாவா இருக்கே!..

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று லாஸ் எஞ்சல்ஸில் உள்ள டோல்பி தியேட்டரில் நடைபெற்றது. அங்கு விருது அளிக்க வந்த ஜான் சீனா நிர்வாணமாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜான் சீனா WWF சம்பியனாக மட்டுமல்லாமல் ஒரு ஹாலிவுட் நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். மல்யுத்த வீரரான ஜான் சீனா மொத்தம் ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் அவர் மரைன் , ரவுண்ட்ஸ், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மேன் ஹன்ட், டீல் அர் நோ டீல் போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அவரது காதலியான எலிசபேத் ஹூபர்டீயு என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஜான் சீனா ஒரு இடது கை பழக்கம் உடையவர் ஆவார்.

jc

 

ஆஸ்கர் விருது விழாவில் நிர்வாணமாக வந்தாரா ஜான் சீனா?:

ஆஸ்கர் விருது விழாவில் மொத்தம் 23 விருதுகளில் 7விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. அதை தொடர்ந்து புவர் திங்ஸ் திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்கப், சிறந்த தயாரிப்பு நிறுவனம் போன்ற பல விருதுகளை வென்று குவித்துள்ளது.

அதில் புவர் திங்ஸ் படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதினை வழங்க ஜான் சீனா வித்தியாசமாக ஆடை அணியாமல் அறிவிப்பு கார்ட் ஒன்றை மறைத்து வைத்து கொண்டு வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பார்பி படத்தின் கதாநாயகி மார்கட் ராபி மற்றும் விழாவில் கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகைகள் பலரும் ஜான் சீனாவை அப்படி பார்த்தவுடன் வியப்பில் வயிறு குலுங்க சிரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜான் சீனா மேடையிலேயே ஆடை அணிந்துக்கொண்டு விருது வழங்கினார்.

உண்மை என்ன?

உலக அளவில் ஒளிபரப்பாகும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜான் சீனா இப்படி ஆடை இல்லாமல் வரவேண்டுமா ஒருவேளை அவர் மறைத்து வந்த அந்த கார்ட் விலகியிருந்தால் அவரை நிர்வாணமாக உலகம் முழுவதும் பார்ப்பது மட்டுமல்லாமல் சர்ச்சை வெடித்திருக்குமே என ஏகப்பட்ட விவாதங்கள் கிளம்பின.

Snapinsta.app 432507028 783444869861066 1198160698943677364 n 1080 1

ஆனால், ஜான் சீனா ஸ்கின் கலர் உள்ளாடையை அணிந்து கொண்டு தான் விருது அளிக்க வந்துள்ளார் என்பது சற்று நேரத்தில் பிரச்சனை வெடிக்கும் முன்பே புகைப்படங்களாக லீக் ஆகி விட்டன. இருப்பினும் ஆஸ்கர் விருது விழாவையே ஜான் சீனாவின் இந்த ஆடையின்றி வந்த ஸ்டன்ட் டிராமா மறக்கடிக்கச் செய்தது தான் நிதர்சனம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews