ஜொத்பூர் வன்முறை: மேலும் ஊரடங்கு நீட்டிக்க உத்தரவு !!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினர் இடையே மோதல் உருவானது.

இதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியது எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணையசேவை முடக்கப்பட்டது.

இந்நிலையில் ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இந்த உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊரடங்கில்  இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மருத்துவ சேவை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டம்-ஒழுங்கை ஆய்வு செய்து இணைய சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரையில் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோத்பூர் தற்பொழுது அமைதி நிலவி வருவதாக அம்மாவட்ட  கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment