Career
கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை
மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ் (Call Center Executive) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் :
கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ் (Call Center Executive) பிரிவில் 07 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.
ஊதியம்:
கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ் (Call Center Executive) பணியிடங்களுக்கு மாதம் ரூ.21,533 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.becil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida – 201307.
மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.becil.com/uploads/vacancy/RecruitmentSAI15may19pdf-77d5896fce6204e7af989d8b82170f33.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-05-2019
