Career
கடற்படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் வேலை
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
எக்சிகியூடிவ் பிரிவு பணி பிரிவில் 55 பணியிடங்களும், டெக்னிக்கல் பிரிவில் 48 பணியிடங்களும், எஜூகேஷன் பிரிவில் 18 பணியிடங்களும் உள்ளன.
கல்வித்தகுதி:
பொறியியல் துறையில் ஏதாவதொரு ஒரு பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.205 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
எஸ்.எஸ்.பி நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு மற்றும் இரண்டாம் நிலைத் தேர்வுகள் மற்றும் நுண்ணறிவுத் திறன், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழு தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/INET_OFFICER_ADV_JUN2020_final.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்ககடைசி தேதி: 29.05.2019
