ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

மாநில அரசின் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

765e61e9920482da16f13b5931a2e254

காலிப் பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் பிரிவில் 52 பணியிடங்களும், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பிரிவில் 13 பணியிடங்களும், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் பிரிவில் 08 பணியிடங்களும், கணினி இயக்குபவர் பிரிவில் 05 பணியிடங்களும், காவலாளி பிரிவில் 09 பணியிடங்களும், மசால்ஜி பிரிவில் 13 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் மற்றும் முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு கணினி சார்ந்த துறையில் படித்திருக்க வேண்டும். மற்ற அனைத்து பணியிடங்களுக்கும் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அனைத்து பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://districts.ecourts.gov.in/erode  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Principal District Judge, Principal District Court, Combined Court Building, Erode, Erode – 638 011.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2019

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment