Career
ரூ.35,000 ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் என அழைக்கப்படும் பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:
Staff Nurse (Grade-A) பிரிவில் 50 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
நர்சிங் பாடப்பிரிவில் ஏ கிரேடு அளவிலான பட்டப்படிப்பை முடித்து நர்ஸ் மற்றும் மிட்வைபரி ஆக நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்:
மாதம் ரூ.35,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகதேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.becil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Deputy General Manager (HR) in BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/EDMC31july19pdf-f09f85eda761af07af0226d4d4e39645.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2019
