Connect with us

விமானப்படையில் ஏர்மேன் வேலை

Career

விமானப்படையில் ஏர்மேன் வேலை

இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியான திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

de7470f7f7d76c18a658829b7979787c

கல்வித் தகுதி:

          குரூப் எக்ஸ் பணியிடங்களுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

          குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது இன்டர்மீடியட் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

          குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல் பணியிடங்களுக்கு மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2, இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.airmenselection.cdac.in    என்ற இணைதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in  அல்லது www.careerindianair force.cdac.in  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

         ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.09.2019 முதல் 24.09.2019

          விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top