முந்துங்கள்… நபார்டு வங்கியில் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

நபார்டு வங்கி ஆனது தற்போது வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அறிவிப்பில் காலியாக உள்ள Project Consultant – Finance பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி குறித்த விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். தகுதியானவர்கள் இதன் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / ICWA அல்லது Finance பாடப்பிரிவில் MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.04.2022 ம் தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச 55 வயது நிர்ணயம் செய்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் Audit / Accounts of skill / Livelihood Projects போன்றவற்றில் முன் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சம்பள விபரம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.55,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

தகுதி:

– ஆங்கிலம், இந்தியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
– காஷ்மீரி, டோக்ரி மற்றும் லடாக்கி பற்றிய அறிந்திருக்க வேண்டும்.
– MS-office-யில் MS-Excel, MS – Powerpoint பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்டுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 06.03.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment