Career
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:
கணினி இயக்குநர் பிரிவில் 5 பணியிடங்களும், நகல் பரிசோதகர் பிரிவில் 5 பணியிடங்களும், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் பிரிவில் 9 பணியிடங்களும், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் பிரிவில் 18 பணியிடங்களும், ஜெராக்ஸ் ஆபரேட்டர் பிரிவில் 1 பணியிடங்களும், ஓட்டுநர் பிரிவில் 2 பணியிடங்களும், அலுவலக உதவியாளர் பிரிவில் 51 பணியிடங்களும், மசால்சி பிரிவில் 10 பணியிடங்களும், அலுவலகக் காவலர் பிரிவில் 20 பணியிடங்களும், சுகாதாரப் பணியாளர் பிரிவில் 6 பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் https://disricts.ecourts.gov.in/kanchipuram என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மாவட்ட முதன்மை நீதிபதி, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு (இருப்பு) – 603 001
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 31.05.2019
