Career
பிரம்மபுத்ரா க்ராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் பிரம்மபுத்ரா க்ராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் நிறுவனத்தில் (Brahmaputra Cracker and Polymer Limited (BCPL)) காலியாக உள்ள டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) மற்றும் Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் :
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) பிரிவில் 30 பணியிடங்களும், Graduate Apprentice பிரிவில் 51 பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி:
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) பணியிடங்களுக்கு Diploma படித்து முடித்து இருக்க வேண்டும். Graduate Apprentice பணியிடங்களுக்கு B.E – B.Tech படித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) பணியிடங்களுக்கு ரூ. 5000 வரை வழங்கப்படும். Graduate Apprentice பணியிடங்களுக்கு ரூ. 7500 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இரண்டு பணியிடங்களுக்கும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலமாக www.psu.shine.com என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2019
