பள்ளிக்கல்வித்துறையில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. முழு விபரங்கள்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வேலைக்கு சுமார் 2 லட்சம் வரை சம்பளம் தர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரிவில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், ஜனவரி 13ம் தேதிக்குள் இணையவழி மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

job 4விண்ணப்பதாரர்கள் முதலில் டிஎன்பிஎஸ்சி பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் என்ற பணிக்கு 11 இடங்கள் காலியாக இருப்பதாகவும் ஆரம்ப சம்பளம் 56 ஆயிரத்து 900 என்றும் அதிகபட்சமாக 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 வரை சம்பளம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 11 காலி இடங்கலில் பொதுப் பிரிவு 2, பெண்கள் பிரிவுக்கு 1, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 2, படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு 1, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் 1, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் பெண்கள் 1, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் 1,
ஆதி திராவிடர் 2 என பிரிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த பணிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் முதன்மை தேர்வு விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலைப் படிப்பு மற்றும் பி.எட் பட்டங்கள் முடித்து இருக்க வேண்டும் என்றும் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இந்த பணிக்கு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த விவரங்களுக்கு https://tnpsc.gov.in/Document/tamil/37_2022_DEO_TAM.pdf என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.