Connect with us

ரூ.25,000 ஊதியத்தில் ஏர் இந்தியாவில் வேலை

Career

ரூ.25,000 ஊதியத்தில் ஏர் இந்தியாவில் வேலை

ஏர் இந்தியா நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கண்ட்ரோலர் பணியிடங்களை  நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

e5048bac8ad76b67bc3e979810ce933f

காலிப் பணியிடங்கள்:

Trainee Controllers  பிரிவில் 25 பணியிடங்களும், Data Entry Operator பிரிவில் 54 பணியிடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி:

Trainee Controllers பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Pilot, Cabin Crew இல் ஒரு ஆண்டு வேலை அனுபவம் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் 3 டிப்ளமோ தேர்ச்சியுடன் Pilot, Cabin Crew இல் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Data Entry Operator  பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Data Entry Operator ஆக 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Trainee Controllers பணியிடங்களுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும்.

Data Entry Operator பணியிடங்களுக்கு ரூ.21,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக www.airindia.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:

Trainee Controllers பணிக்கு 30.04.2019, Data Entry Operator பணிக்கு 02.05.2019 நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

CMs Department, Air India Limited, GSD Complex,

Opps.New ATC Tower Building, Near IGIA Terminal-2,

New Delhi – 110 037

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top