பெண்களுக்கான வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.6400 சம்பளத்தில் வேலை!

திருநெல்வேலி சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள MULTI PURPOSE HELPER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திருநெல்வேலி சமூக நல அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள MULTI PURPOSE HELPER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
MULTI PURPOSE HELPER – 8 காலியிடங்கள்

வயது வரம்பு :
MULTI PURPOSE HELPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 40
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.6,400/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
MULTI PURPOSE HELPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
MULTI PURPOSE HELPER –சமைக்கத் தெரிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். பெண் விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்குள் 14.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலகம்,

பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு,

வ.ஊ.சி மைதானம் எதிரில்,

திருவனந்தபுரம் ரோடு,

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி- 627002

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment