ஜியோ சேவையில் திடீர் பிரச்சனை: பயனர்கள் அதிர்ச்சி
இந்திய தொலைதொடர்புத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஜியோ சேவையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இந்திய தொலைதொடர்பு துறையில் ஜியோ வந்த பின்தான் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்பட்டன என்பது குறைந்த கட்டணத்தில் அதிக நேரம் பேசும் வசதி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்களாக இருந்த கோடிக்கணக்கானோர் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மாலை திடீரென ஜியோ சேவையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியவில்லை என்று டுவிட்டரில் ஜியோ பயனாளர்கள் குற்றஞ்சாட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.
இந்த நிலையில் ஜியோ இது குறித்து விளக்கமளிக்கையில் இந்த கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்றும் இது இந்த கோளாறு தற்காலிகமானது என்றும் கூறியுள்ளது.
