ஜியோ கட்டண உயர்வை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடுவது எப்படி? ஒரு சூப்பர் ஐடியா!

ஜியோ நிறுவனத்தின் பிரிபெய்டு கட்டணம் நாளை முதல் உயர உள்ளதை அடுத்து ஒரு வருடத்திற்கு அந்த கட்டணத்தை ஒத்திப் போடுவது எப்படி என்பது குறித்த ஐடியாவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஜியோ நிறுவனத்தின் பிரிபெய்டு கட்டணங்கள் அனைத்தும் உயர்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் ஜியோ நிறுவனம் ஒரு சலுகையை வழங்கியுள்ளது

இந்த சலுகையின்படி இன்றுக்குள் ரீசார்ஜ் செய்து கொண்டால் அந்தச் ரீசார்ஜ் காலம் முடியும் வரை பழைய கட்டணத்தின் அனைத்து சலுகைகளையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அதாவது இன்று ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்தால் அடுத்த ஆண்டு வரை நாம் பழைய கட்டணத்திலேயே அனைத்து சலுகைகளையும் பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐடியாவை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment