Connect with us

ஐந்து மாதங்களுக்கு அதிரடி ஆபர்களை அள்ளி வழங்கிய ஜியோ: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

News

ஐந்து மாதங்களுக்கு அதிரடி ஆபர்களை அள்ளி வழங்கிய ஜியோ: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி


61b33d62a95531c60a9b8822c40e9a8a

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு துறையான ஜியோ நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு இலவச டேட்டா உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒரு சிறப்பு சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. இதன்படி 1,999 ரூபாய்க்கு ஜியோஃபை ஹாட்ஸ்பாட் வாங்கினால் 5 மாதங்கள் இலவச டேட்டாவும், ஜியோ டு ஜியோ இலவச வாய்ஸ்கால்களும் கிடைக்கும். மேலும் ஜியோஃபை வாங்கியவுடன் ஏற்கனவே அமலில் இருக்கும் பிளான்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஜியோஃபை ஹாட்ஸ்பாட் வாங்கியவுடன், அதற்கான ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்படும். பின்பு, ஏற்கனவே உள்ள 3பிளான்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

முதல் பிளான் 199 ரூபாய். இதில் 1.5ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். மேலும் 99 ரூபாய் செலுத்தினால் ஜியோ பிரைம் சந்தாதாரராக மாறலாம். இதில், ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் 140 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் வசதிகள் கிடைக்கும்.

இரண்டாவது பிளான் ரூ.249. இதில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் மற்றும் 112 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் வசதிகள் கிடைக்கும்.

மூன்றாவது பிளானான 349 . இதில் தினமும் 3ஜிபி டேட்டா, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால்ம் தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் வசதிகள் கிடைக்கும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top