‘ஜிகர்தண்டா 2’படத்தின் டீசர் வெளியீடு… படக்குழு அறிவிப்பு!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இவர் கடந்த 2014-ம் ஆண்டு இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படம் பட்டித்தொட்டியெல்லாம் பம்பர் ஹிட் கொடுத்தது.

இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தனர். இந்த சூழலில் படம் வெளியாகி சுமார் 8 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்த ‘ஜிகர்தண்டா 2’ எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

jigar

அதற்கு ஏற்ப இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விரைவில் ‘ஜிகர்தண்டா 2’ வரப்போவதாகவும் இதற்காக கதை எழுதி வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் படத்தின் பூஜை இன்று தொடங்கவுள்ளதாகவும், இதற்கான டீசர் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்மாக தெரிவித்துள்ளனர்.

FjrmIh VsAAIEOd

மேலும், முதன் முறையாக எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் ஆகியோர் கூட்டணி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.