தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது படத்தில் மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய ஜீகர்தாண்டா படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதாவது சித்தார்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா தேசிய விருது பெற்று நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்தநிலையில் ஜிகர்தண்டா பார் 2 படம் எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஜீகர்தாண்டா 2 எடுக்கப்போவதாக படத்தின் இயக்குனர் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.
குறிப்பாக இப்படத்திற்கு ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே சந்திரமுகி பார்ட் 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் நிலையில் மிகப்பெரிய வெற்றையை கொடுத்த இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கடந்ததையொட்டி சிறப்பு வீடியோவை பகிர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டாம் பாகத்தின் கதை எழுதும் பணி தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
And….. pic.twitter.com/pKL2Qi4oks
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022