நடிகையை கொலை செய்துவிட்டு கொள்ளையர்கள் கொலை செய்ததாக நாடகமாடிய கணவர் கைது

பிரபல நடிகையை கொலை செய்து விட்டு அவரை கொள்ளையர்கள் கொலை செய்தது போல் நாடகம் ஆகிய நடிகையின் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரியா குமாரி, தனது கணவர் பிரகாஷ் குமார் மற்றும் இரண்டு வயது மகனுடன் நேற்று மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் அந்த காரை வழி மறித்ததாகவும் அவர்கள் கடுமையாக தாக்கியதில் ரியா குமாரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரியாவை அவரது கணவர் காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் குறித்து ரியா குமாரியின் கணவர் பிரகாஷ்குமார் கூறிய கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததையடுத்து அவரை தீவிரமாக விசாரித்தனர்.

இந்த நிலையில் ரியா குமாரின் கணவர் தான் அந்த கொலையை செய்திருக்கலாம் என அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.