Connect with us

ஜெயங்கொண்டம்: 25 ஆண்டுகளாக திட்டம் தொடங்காமல் இருந்த நிலம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!!

lands

Tamil Nadu

ஜெயங்கொண்டம்: 25 ஆண்டுகளாக திட்டம் தொடங்காமல் இருந்த நிலம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!!

தமிழக அரசு இன்று அரசாங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரிச் சுரங்கத்திற்கு கையகப்படுத்திய நிலங்களை திரும்ப ஒப்படைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

1996ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் மற்றும் அதை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 8 ஆயிரத்து 373 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. கையகப்படுத்தப்பட்டிருந்தற்கு இழப்பீடும் தராமல் 25 ஆண்டுகளாக திட்டமும் தொடங்கப்படாமல் இருந்தது.

நில உரிமையாளர்கள் இறந்திருந்தால் அவரது வாரிசு தாரர்கள் இடம் ஒப்படைக்கவும் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ரூபாய் 35 ஆயிரத்தை திருப்ப வசூலிக்காமல் உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க கையகப்படுத்திய நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இழப்பீட்டை திரும்ப வசூலிக்காமல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு ஆணை இருப்பது மகிழ்ச்சி என்றும் கூறினார். ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 11 கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top