
Tamil Nadu
ஒற்றை தலைமை நாயகன் எடப்பாடி பழனிசாமி!!-ஜெயக்குமார் புகழாரம்;
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் இடையே பெரும் சண்டை ஏற்பட்டு இருந்தது. மேலும் அதிமுகவின் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்த அதிமுக நிர்வாகி மீது பலரும் தாக்கினர்.
மேலும் ஜெயக்குமாரின் கார் முன்பு ops ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அவர் பரபரப்பான சூழல் மத்தியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
மேலும் ஒற்றை தலைமை பற்றி நான் கூறியது சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது என்றும் கூறினார். இந்த நிலையில் இன்று அதிமுகவில் பொது செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இதில் அதிமுகவில் உள்ள அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் வரிசையாக வந்து தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ஆகியோர் இருபத்தி மூன்று தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என்று கூறினர்.
இந்த நிலையில் யாரும் கூறாத வகையில் ஜெயக்குமார் ஒற்றை தலைமை நாயகன் எடப்பாடி பழனிசாமி என்று கூறி அங்குள்ள வரை ஆச்சரியப்படுத்துகிறார். அதன்படி ஒற்றை தலைமை நாயகன் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
