பிரபல நகைக்கடையில் கொள்ளை: மேலும் 2 பேர் கைது!!

தாம்பரம் அருகே உள்ள ஃளூஸ்டோன் என்ற தங்க நகை கடையில் இன்று அதிகாலை தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தினர்.

அதன் படி, வடமாநிலத்தை சேர்ந்த அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மாநகர பேருந்துகளில் ஒலிப்பெருக்கி.. உதயநிதி ஸ்டாலினின் தொடங்கி வைத்தார்!!

இந்நிலையில் ரகுமான் என்ற சிறுவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அதோடு திருடிய நகைகளை வீட்டின் மொட்டைமாடியில் பதுக்கி வைத்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அதே போல் அசாமை சேர்ந்த 3 சிறார்களிடமும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை தனிப்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கனவில் வந்த பாம்பு!! விவசாயின் நாக்கை கடித்த விபரீதம்..!!

இதனிடையே கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் கொள்ளை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.