#breaking….பென்சனுக்கு இத்தனை கோடியா? நகைக்கடன் தள்ளுபடிக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு தெரியுமா?
இன்று காலை தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் தமிழகத்தின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்.
இதில் பெரும்பாலானவர்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி அவர் வரிசையாக அறிவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கல்வி, மருத்துவம், வேளாண்மை,கட்டிட பொருட்கள் உள்ளிட்ட பலவற்றிற்குகான நிதியினை அவர் அறிவித்தார்.
அரசு ஓய்வூதியர்களுக்கு பென்சன் தொகை பற்றி நிதி ஒதுக்கீட்டினை பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூபாய் 19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அதில் அகவிலைப்படி மற்றும் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டங்களுக்கு இந்த 19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் நகை கடன் தள்ளுபடி பற்றியும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அதன்படி நகை கடன் தள்ளுபடிகாக ரூபாய் ஆயிரம் கோடியும், சுய உதவி குழுக்களின் கடன் தொகை ரூபாய் 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
