நகை கடன் தள்ளுபடி-மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு!: அமைச்சர் பெரியசாமி விளக்கம்;

நேற்றைய தினம் தமிழகத்தில் நகை தள்ளுபடி அனைவருக்கும் பொருந்தாது என்ற தகவல் வெளியானது. இது பலர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி பற்றி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளித்தால் ஆய்வு செய்து நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

40 கிராமக்குட்பட்டு  22 லட்சத்து 52 ஆயிரத்து 226 பேர், 41 லட்சத்து 18 ஆயிரத்து 988 நகைகளை வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேர் வைத்த 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 நகை கடன் தள்ளுபடி தகுதியானவை என்றும் அமைச்சர் பெரியசாமி கூறினார்.

ஒரே குடும்பத்தில் கடன் பெற்றவர்கள், பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்களின் கடன்களை தள்ளுபடிக்கு தகுதியற்றவை என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. 35 லட்சத்துக்கு மேற்பட்ட நகை கடன் தள்ளுபடி கிடைக்காதது போல் வெளியாகும் செய்தி தவறானது என்றும் தகவல் கிடைத்துள்ளது.88.50% நகை கடன் தள்ளுபடி தகுதியானவை என்று அமைச்சர் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment