தந்தை தயாரிப்பில் நடிக்கும் ஜீவா…. அட டைட்டிலே வித்தியாசமா இருக்கே…..!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தான். பெயருக்கு ஏற்றாற்போல் இவர்கள் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சூப்பர்குட் பிலிம்ஸ் தான். அவ்வளவு அருமையாக படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வார்கள்.

 வரலாறு முக்கியம்

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்பி செளத்ரி வேறு யாருமல்ல நடிகர் ஜீவாவின் தந்தை தான். செளத்ரி தமிழ் சினிமாவிற்கு பல இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பதை செளத்ரி முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஆர்பி செளத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் புதிய படம் ஒன்றை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள அந்த படத்திற்கு வரலாறு முக்கியம் என தலைப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜீவா

படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட நிலையில் இன்று ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ரொமாண்டிக் காமெடி படமாக தயாராகியுள்ள இப்படத்தில் காஷ்மீரா பர்தேஷி, ப்ரக்யா நாகரா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.

ஜீவா ஏற்கனவே அவரது அப்பா ஆர்பி செளத்ரி தயாரிப்பில் ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த வரிசையில் தற்போது வரலாறு முக்கியம் படமும் இணைந்துள்ளது. ஒருவேளை இப்படம் வெற்றி பெற்றால் சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment