ஜீவநாடி என்றால் என்ன?

நாடி ஜோதிடம்

செவ்வாய் ஸ்தலம் என்று புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவிலில் நாடி மூலம் பலன் சொல்பவர்கள் ஒரு காலத்தில் உண்மையானவர்கள் இருந்தனர். தற்போது இந்த காலத்தில் அதிகம் பேர் வந்துவிட்டதால் யார் உண்மையான நாடி மூலம் பலன் சொல்கிறார் என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்து விட்டது.

உண்மையாக பலன் சொல்லுபவர்கள் வெகுவாக குறைந்து விட்டதும் உண்மை.

நாடிகளில் ஜீவ நாடி என்றொரு நாடி உள்ளது இது பெரும்பாலும் யாரிடமும் இருக்காது. மற்ற நாடிகளை போல் அல்லாமல் இந்த நாடியில் நாம் சென்று அங்கு உட்கார்ந்த உடன் நமது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்க இருப்பது நாடியில் ஒளிபோல் எழுத்து வடிவில் காட்சி தரும் என சொல்லப்படுகிறது.

நோய் தீர்க்கும் பன்னீர் இலை விபூதி!

இந்த நாடி படிப்பவர்களும் தமிழ்நாட்டில் ஒரு சிலர்தான் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு ஹனுமத் தாசன் என்ற பெரியவர் ஜீவ நாடி படித்து வந்தார் அவரது மறைவுக்கு பிறகு ஜீவநாடி படிப்பவரை காண்பது அரிதான விசயமாகவே உள்ளது.

எல்லா இடத்திலும் போலிகள் இருப்பது போல இதிலும் போலிகள் உள்ளனர். ஆனால் முறையாக இறைவனை வணங்கி சரியாக இருக்கும் சரியான நபர்களுக்கு மட்டுமே ஜீவ நாடி ஓலைச்சுவடி கிடைக்கும். ஒரிஜினலாக ஜீவ நாடி படிப்பவர்கள் தமிழ்நாட்டில் ஒரு சிலர் உண்டு அதே நேரத்தில் போலிகளும் அதிகம் உண்டு என்பதை இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.