தமிழ் சினிமாவில் புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.பி செளத்ரி. இவர் வித்தியாசமான படங்களை தயாரித்து திறமையான இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார்.
முன்புபோல் அதிக படங்கள் இவர் தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பதில்லை. இவரது மகன் ஜீவா இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும் நீண்ட நாட்களாக எந்த ஒரு படமும் பெரிய வெற்றி பெறாத நிலை உள்ளது.
இந்த நிலையில் ஆர்,பி செளத்ரி புதிதாக படம் ஒன்று தயாரித்து இருக்கிறார். படத்தின் பெயர் வரலாறு முக்கியம் என வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாகவே ஜீவாவின் படங்கள் சரிவர செல்லாத நிலையில் இப்படமாவது கை கொடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படமாவது ஜீவாவுக்கு முன்னணி அந்தஸ்தை திரும்ப கொடுக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படத்தை சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்குகிறார்.
Super Good Films RB Choudary presents
A Santhosh Rajan Directorial
“Varalaru Mukkiyam” pic.twitter.com/z1Oueu4Nom
— Jiiva (@JiivaOfficial) January 4, 2022