Connect with us

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலிடம் பிடித்தது இந்த மாநிலமா?

செய்திகள்

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலிடம் பிடித்தது இந்த மாநிலமா?

மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் ஜேஇஇ தேர்வில் மெயின், அட்வான்ஸ் என பிரித்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அட்வான்ஸ் தேர்வு நடைப்பெற்றது.

இதன் முடிவுகள் இன்றைய தினத்தில் வெளியாகியுள்ளது. இதில் பாம்பே மண்டலத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஷிஷிர் என்பவர் ஜேஇஇ அட்வான்ஸ்டில் பொது தரவரிசைப் பட்டியலில் 60 இல் 314 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அதே போல் பெண்கள் பிரிவில் டெல்லியின் அனிஷ்கா கப்ரா 277 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த சூழலில் நடப்பாண்டில் 1,60,038 பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்த நிலையில், 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வெழுதிய மாணவர்கள் https://result.jeeadv.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது மதிப்பெண்களை அறிந்துக்கொள்ளலாம்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top