JEE தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு விலக்கு.. தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!

ஜே.ஈ.ஈ தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சமீபத்தில் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அளிக்கப்படவில்லை என்பது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

இதனை அடுத்து ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் உள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தேசிய தேர்வு முகமை தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைந்ததால் அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை என்பதை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்தே இந்த அறிவிப்பை தேசிய தேர்வுகளை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதி அளிக்கிறது என்றும் வரவேற்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.