ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு!

066750d52da21ca43b78ff3f34e4f993

கடந்த மாதம் 26, 27 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடந்த ஜே.இ.இ. தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது 

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeemai.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது 

இந்த தேர்வு எழுதியவர்கள் 44 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளதாகவும் 18 பேர் இந்தியாவின் முதல் இடத்தில் பிடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலிடம் பிடித்த 18 பேர்களில் 4 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும், மூன்று பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், உத்தர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தலா இரண்டு பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தற்போது மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment