பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஜெய்பீம் இயக்குனர்: எந்த படத்தில் தெரியுமா?

கணவர் கொலை வழக்கில் பிரபல சரவணபவன் உரிமையாளரை எதிர்த்து ஜீவஜோதி நடத்திய போராட்டத்தை மையக்கருத்தாக வைத்து தோசா ஜிங் என்ற பெயரில் இந்தியில் திகில் படமாக உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட நிறுவனம் ஜங்கிலீ பிச் தயாரிக்கும் தோசா ஜிங் திரைப்படத்தை தமிழ் பட இயக்குனர் ஞானவேல் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் காவல்துறை அடக்குமுறையை சித்தரித்து மிகப்பெரிய சாதனை படைத்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். ஹோட்டல் உரிமையாளரை எதிர்த்து 18 ஆண்டுகளாக ஜீவஜோதி போராடி வழக்கில் தண்டனை பெற்று தருவது போன்று கதை அமைந்துள்ளது.

வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் 20 ஆண்டுகள் ஹோட்டல் உரிமையாளருக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில் படத்தில் தொடர்புடைய மையத்தின் காட்சிகளை அன்றைய பத்திரிகையாளராக தாம் நேரில் பார்த்தவர் என்பதால் திரைப்படத்தின் கதாபாத்திரம் மற்றும் காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment