தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், “திமுக ஆட்சிக்கு வந்ததற்கு எடப்பாடி கே.பழனிசாமிதான் காரணம். இபிஎஸ்ஸின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் அதிமுக ஆட்சியை இழந்தது.இபிஎஸ்க்கு தற்காலிக வெற்றிதான் கிடைத்தது. துரோகிகளின் கைகளில் இரு இலை சின்னம் வலுவிழந்து விட்டது.”
“அம்மாவின் தொண்டர்களாகிய நாம் அனைவரும் ஒரு அணியாக செயல்பட்டால்தான் நாடாளுமன்றத்தில் அதிமுக வெற்றிபெற முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அனைவரும் ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து கூட்டணி அமைத்து ஜெயாவின் ஆட்சியை கொண்டுவர மூச்சு உள்ளவரை போராடுவோம்.
ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் இருந்தும், அதிமுக பிரகாசிக்க வாய்ப்பில்லை.இரட்டை இலை சின்னம் இருந்தும், நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை என கூறியுள்ளார்.