Entertainment
செப்டம்பர் 10ஆம் தேதி செம விருந்து: ஜெயம் ரவி ரசிகர்கள் உற்சாகம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது ’பூமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
விவசாய பிரச்சனையை மையமாக எடுத்து அதை உணர்ச்சிகரமாக இயக்கியுள்ள இயக்குனர் லட்சுமண் இந்த படம் தனக்கும், ஜெயம் ரவிக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், இந்த படம் நிச்சயம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெறும் என்றும் குறிப்பாக இந்த படத்தால் விவசாயிகள் விழிப்புணர்வு அடைவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் செப்டம்பர் பத்தாம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ’தமிழன் என்று சொல்லடா’ என்று தொடங்கும் இந்த பாடல் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என்றும் இந்த பாடல் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
ஜெயம் ரவி, நிதிஅகர்வால், ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
