நீங்க ஜெயிச்சுட்டீங்க நான் தோத்துட்டேன்.. புலம்பிய பூமி பட இயக்குநர்!!!

7492e70fd2ba7d890fff4fb170d128b0

ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மன் காட்டமான பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஜெயம் ரவி. 

இவர் நடிப்பில் பூமி திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், பூமி படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மனை காட்டமான விமர்சித்து பதிவிட்டார். இதை கண்ட இயக்குநர் அதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளது வைரல் ஆகி வருகிறது. 

இதுகுறித்த தனது பதிவில், ”நான் இந்த படம் எடுத்தது, நம்ம எதிர்கால தலைமுறை நல்லா இருக்கனும்னு உங்களுக்காகதான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா..? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான் தோத்துட்டேன்” என பதிவிட்டுள்ளார். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.