Connect with us

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளை நிறைவு!!!

ஜெயலலிதா

தமிழகம்

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளை நிறைவு!!!

கடந்த 2017-ம் ஆண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைப்பெற்றறு வந்தது.

குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, இளவரசி மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. அதோடு அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அறிக்கையை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுக ஆணையத்திற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம்  கூறியுள்ளது.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவ குழு ஆய்வு அறிக்கையை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கால அவகாசம் என்பது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top