எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவின் சிலை: ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பரபரப்பு!

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலை வைக்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக அலுவலகம் சார்பில் சிறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோர விபத்து! தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் படுகாயம்!!

இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை-க்கு மாலை அணிவிப்பதற்கு வருவதற்கு முன்பாக ஓபிஎஸ் தொண்டர்கள் அம்மாவின் சிலையை எம்.ஜி.ஆர் சிலை அருகே வைக்க முற்பட்டனர்.

தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அம்மா சிலையை பறிமுதல் செய்து கொண்டுவந்த வாகனத்துடன் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதோடு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுனருக்கு மாரடைப்பு! கண்ட்ரோல் இழந்த பேருந்து… சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

இத்தகைய சம்பவமானது ஓபிஎஸ் அணியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.