Connect with us

ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கும் தேதி அறிவிப்பு!

Tamil Nadu

ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கும் தேதி அறிவிப்பு!

5f351828e920c1d16f6c23ba219ca6b5

சென்னை மெரினாவில் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் உள்ள அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூபாய் 50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதும் இந்த கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இடையில் சிலமாதங்கள் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டாலும் மீண்டும் இந்த பணி தொடங்கப்பட்டு நினைவிடம் விரைவாக கட்ட சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு கட்டுமான பணி நடந்து வந்தது 

இந்த நிலையில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கும் தேதி ஜனவரி 27 என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் 27 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2b659654eb3e806135bb2a3a608f0776-1

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top