ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான்! மரணம் பற்றி ஓபிஎஸ்சிடம் எப்போது விசாரணை?

ஆட்சியில் இருக்கும்போதே உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இவரின் மரணம் இன்று வரை சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு நேற்றைய தினம் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலத்தில் 2016ஆம் ஆண்டு வெற்றிக்கு முன்பே ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லை என்றும் கூறினார், அவருக்கு அடிக்கடி, மயக்கம், தலைவலி, தனிநபர் இன்றி நடக்க முடியாத நிலைமை உள்ளிட்டவைகள் இருந்ததாகவும் கூறினார்.

ஆனால் அவர் ஓய்வெடுக்காமல் 16 மணி நேர வேலை உள்ளதாகவும் கூறியதாக நேற்று உள்ள மருத்துவர் வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் இன்று காலை குறுக்கு விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டு அது மாரடைப்புதான் என்று மருத்துவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான் என்று மருத்துவர் மதன் குமார் கூறினார்.

குறுக்கு விசாரணையின்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் மதன் குமார் இத்தகைய பதிலளித்தார். மாரடைப்பு ஏற்பட்ட போது ஜெயலலிதாவுக்கு உயிரை காப்பாற்ற அனைத்து சிகிச்சையும் தரப்பட்டது என்றும் கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி யுள்ளது ஆணையம். மார்ச் 15ஆம் தேதிக்கு பின் ஓபிஎஸ் அழைப்பு ஆணையம் விசாரிக்க வாய்ப்புள்ளதாகவும் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment