Connect with us

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் !!

Jayalalitha

Tamil Nadu

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் !!

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் !!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இருவர் மறுவிசாரணைக்கு ஆஜராகி தக்களது தரப்பு வழக்குகளை முன்வைத்தனர்.

ஜெயலிலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் இதுவரையில் 150 க்கும் அதிகமானோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குறிப்பாக ஜெ. உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்களை தொடர்ந்து ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பினரிடம்  விசாரணையினை  நிறைவு செய்தனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்களிடம் மறு விசாரணை தொடங்கியுள்ளது. அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியதால் அப்பல்லோ மருத்துவர்கள் 11 நபர்களிடம் மறுவிசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, மருத்துவர்கள் தவபழனி, செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெ. தனக்கு நன்றி தெரிவித்ததாக எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளித்த வாக்குமூலப்படி செந்தில்குமாரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதில் அளித்த செந்தில்குமார் ஜெ. சுய நினைவில்லாமலேயே மருத்துவ மனையில் இருந்ததாகவும், மருத்துவர் கிலானிக்கு நன்றி தெரிவித்தது பற்றி தனக்கு தெரியாது என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், நாளை மருத்துவர்கள் நரசிம்மன், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு  இருப்பது  குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top