ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும் முன்பே… அப்பல்லோ மருத்துவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

ஜெயலலிதா பதவியேற்கும் முன்பே அவருக்கு சில உடல் நலக்குறைவுகள் இருந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கியுள்ளது.  முதல் நாள் விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி கொடுத்த வாக்குமூலம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

2016ல் ஜெயலலிதா பதவியேற்கும் முன்பே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது.

ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்ததை அவர் மறுத்தார்.

2016ல் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது.

மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்து, பரிசோதனை செய்தேன் என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன்.

நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறினார் ஜெயலலிதா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment